மலைப்பாதையில் உருண்டு விழுந்த கார்
பன்றிமலை அருகே மலைப்பாதையில் உருண்டு விழுந்த கார் டிரைவர் படுகாயம்
கன்னிவாடி:
பன்றிமலை காளியம்மன் கோவில் அருகே மலைப்பாதையில், கேரள பதிவு எண் கொண்ட ஒரு கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 15 அடி பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள், விரைந்து சென்று காருக்குள் சிக்கி படுகாயம் அடைந்த டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக கன்னிவாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கன்னிவாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், டிரைவர் மட்டுமே காரை ஓட்டி வந்தது தெரியவந்தது.
ஆனால் அவர் யார்?, எதற்காக அங்கு வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் பதிவு எண்ணை அடிப்படையாக கொண்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய காரில், பொன்ராஜ் என்று பெயர் எழுதப்பட்டு செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டனர். அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் விபத்தில் சிக்கிய கார் குறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story