100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி ஆட்டோ விழிப்புணர்வு பேரணி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சியில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி ஆட்டோ விழிப்புணர்வு பேரணி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் நேர்மையான முறையில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்டோ விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் தலைமை தாங்கி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.
சப்-கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி கச்சிராயப்பாளையம் சாலை, காந்திரோடு, 4 முனை சந்திப்பு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. இதில் தாசில்தார் பிரபாகரன், துணை தாசில்தார் சேகர், வருவாய் ஆய்வாளர் ராமசாமி, கிராம நிர்வாக அலுவலர் அக்பர்பாஷா மற்றும் ஆட்டோ சங்க நிர்வாகிகள் செல்வம், மணிகண்டன், நாகராஜன், வடிவேல், முத்து உள்பட ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story