அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்த தானியங்களுக்குண்டான ரூ.40 லட்சம் நிலுவைத்தொகையை கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் வேல்மாறன் தலைமை தாங்கினார். 50-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து கண்டாச்சிபுரம் தாசில்தார், மாவட்ட வேளாண் விற்பனைக் குழு செயலாளர் கண்ணன், விற்பனை கூட கண்காணிப்பாளர் தாமோதரன், அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் ஆகியோர் விரைந்து வந்து விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் இரவு வரை நீடித்து வருகிறது.
Related Tags :
Next Story