வழிப்பறி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வழிப்பறி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 11 March 2021 11:05 PM IST (Updated: 11 March 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

வழிப்பறி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள எஸ்.எம்.நகரை சேர்ந்தவர் சிட்டி பாபு என்கிற சையது இப்ராகிம் (வயது 32). இவர் கடந்த ஜனவரி மாதம் 20-ந் தேதி ஜடையம்பாளையம் பகுதியை சேர்ந்த அபுதாகீர் என்பவரை தாக்கி பணம் பறித்தார். 

இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து சையது இப்ராகிமை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் மீது மேட்டுப்பாளையம், காரமடை, உக்கடம், ரேஸ்கோர்ஸ் உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளை, வழிப்பறி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 12 வழக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

எனவே அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார். 

இதையடுத்து சையது இப்ராகிமை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது கலெக்டர் உத்தரவிட்டார். அதற்கான நகல் கோவை சிறையில் இருக்கும் சையது இப்ராகிமிடம் வழங்கப்பட்டது.  
 

Next Story