திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இன்ஸ்ட்டியூசன் இன்னோவேஷன் கவுன்சில் சார்பில், புதுமையான அறிவியல் கண்டுபிடிப்பு தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வரும், இன்னோவேஷன் கவுன்சில் தலைவருமான மகேந்திரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘மாணவர்கள் புதுமையான அறிவியல் கண்டுபிடிப்பு தொழில்நுட்பங்களை உருவாக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்’ என்றார். கவுன்சில் அமைப்பாளர் நித்தியானந்த ஜோதி வரவேற்றார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி திருச்செந்தூர் கிளை மேலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், புதுமையான அறிவியல் கண்டுபிடிப்பு தொழில்நுட்பங்களை செயலாக்கம் செய்வதற்கு வங்கி எவ்வாறு உதவுகிறது? என்பது குறித்து விளக்கி கூறினார். கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் கணேசன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் மகேந்திரன் ஆலோசனையின்பேரில், இன்னோவேஷன் கவுன்சில் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story