குளித்தலை அருகே வைக்கோல்போர் தீயில் எரிந்து நாசம்
குளித்தலை அருகே ரூ.1 லட்சம் மதிப்பிலான வைக்கோல்போர் தீயில் எரிந்து நாசமானது.
குளித்தலை
வைக்கோல்போர்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தண்ணீர்ப்பள்ளி பகுதியில் சாலையோரம் தனிநபர் ஒருவருக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் அவர் மாடுகளுக்கு உணவாக கொடுக்க வைக்கோல்போர் கட்டுகள் வாங்கி வைத்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த வைக்கோல்போர் திடீரென தீ பிடித்துள்ளது. அதை பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முற்பட்டுள்ளனர். இருப்பினும் மளமளவென தீ பரவியுள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலை புகைமூட்டமாக காணப்பட்டது.
தீயில் எரிந்து நாசம்
இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்கள் உதவியுடன் வைக்கோல்போரில் எரிந்து கொண்டிருந்த தீயை பலமணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
இருப்பினும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல்போர் தீயில் எரிந்து நாசமானது.
Related Tags :
Next Story