மத்தூர் அருகே பரபரப்பு: போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை


மத்தூர் அருகே பரபரப்பு: போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 March 2021 12:10 AM IST (Updated: 12 March 2021 12:15 AM IST)
t-max-icont-min-icon

மத்தூர் அருகே போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மத்தூர்,

நாமக்கல் மாவட்டம் சாணார்பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஹரிஹரசுதன் (வயது 32). இவருடைய மனைவி கார்குழலி. இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது ஹரிஹரசுதன் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே போச்சம்பள்ளி 7-வது பட்டாலியன் சிறப்பு காவல் படையில் போலீசாக பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் சமீபத்தில் அவர் பதவி உயர்வுக்கான சிறப்பு பயிற்சி முகாமிற்கு சேலம் சென்று விட்டு மீண்டும் போச்சம்பள்ளியில் உள்ள காவலர் குடியிருப்புக்கு திரும்பி வந்தார். நேற்று முன்தினம் இரவு ஹரிஹரசுதன் ஒரு அறையிலும், மனைவி கார்குழலி மற்றொரு அறையிலும் படுத்து தூங்கினார்களாம்.
விசாரணை
பின்னர் கார்குழலி கண் விழித்து மற்றொரு அறையில் பார்த்தபோது கணவர் ஹரிஹரசுதன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அலறி துடித்தார். இதுகுறித்து மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் ஹரிஹரசுதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
 ஹரிஹரசுதன் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story