சிவன் கோவில்களில் மகாசிவராத்திரி வழிபாடு
சிவன் கோவில்களில் மகாசிவராத்திரி வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கரூர்
சிவராத்திரி வழிபாடு
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று மகாசிவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி பசுபதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு 4 கால பூஜைகள் நடந்தன. கரூர், திருமாநிலையூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளானோர் கோவிலுக்கு வந்து பசுபதீஸ்வரரை தரிசனம் செய்து சென்றனர். அப்போது மனமுருகி சாமியை வழிபட்டனர். மேலும் சிவராத்திரி நாளில் கண்விழித்து சிவனை தரிசித்தால் மங்கல வாழ்வு உண்டாகும் என ஐதீகம் உள்ளதால் பக்தர்கள் பலர் இரவு வரை கோவிலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நேரம் அதிகமாக அதிகமாக அதிகளவில் பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இது போல், வஞ்சுலீஸ்வரர் கோவில், 5 ரோடு அருகே உள்ள கோடீஸ்வரர் கோவில், செட்டிப்பாளையம் குண்டலீஸ்வரர் கோவில், நெரூர் சதாசிவம் பிரேம்மேந்திராள் கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு சிவன் கோவில்களிலும் சிவராத்திரி வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தோகைமலை
தோகைமலை அருகே கழுகூர் கஸ்பாவில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், விபூதி, தேன் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபம் காட்டப்பட்டது. தொடர்ந்து துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதேபோல சின்னரெட்டிபட்டி மலை மீது அமைந்திருக்கும் ஆவுடைலிங்கேஸ்வரர், இடையபட்டி சிவன் கோவில், ஆர்.டிமாலை விராச்சிலை ஈஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
லாலாபேட்டை
லாலாபேட்டை கடைவீதியில் உள்ள ஸ்ரீமார்கண்டேயர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு பால், பழம், விபூதி, பன்னீர், மஞ்சள் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. சுவாமி சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் நன்செய்புகளூரில் பிரசித்தி பெற்ற மேகபாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று மகாசிவராத்திரியையொட்டி சுவாமிக்கு முதல் காலப்பூஜை, இரண்டாம் காலபூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் இரவு முழுவதும் கோவிலில் தங்கி சிறப்பு வழிபாடு நடத்தினர். இதேபோல் காகித குடியிருப்பில் உள்ள காசி விஸ்வநாதன் கோவில், தோட்டக்குறிச்சி சொக்கநாதர் கோவில், நன்னீர் சிந்தாமணி ஈஸ்வரர் கோவில், மண்மங்கலம் மணிகண்டேஸ்வர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
=
Related Tags :
Next Story