ஊத்தங்கரை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை மாற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்
ஊத்தங்கரை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை மாற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டசபை தொகுதிக்கு அ.தி.மு.க. சார்பில் தமிழ்செல்வம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இந்தநிலையில் ஊத்தங்கரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அ.தி.மு.க. கொடியோடு அப்பகுதியில் திரண்டனர். பின்னர் ஊத்தங்கரை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை மாற்றக்கோரி அண்ணாநகர் பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி மெயின்ரோடு வரை ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story