அங்காளம்மன் கோவிலில் மாசி பெருவிழா


அங்காளம்மன் கோவிலில் மாசி பெருவிழா
x
தினத்தந்தி 12 March 2021 12:27 AM IST (Updated: 12 March 2021 12:27 AM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

மேல்மலையனூர், 

மேல்மலையனூரில்  உள்ளபிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில் மாசி பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று (வெள்ளிக்கிழமை)  தொடங்குகிறது. இதையொட்டி அம்மனுக்கு  சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவின்  2-ம் நாள் நிகழ்ச்சியாக மயானக்கொள்ளை விழா நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. 
 சிவபெருமானின் பிரம்மஹத்திதோஷம் போக்க பார்வதி ஆவேச உருவம் கொண்டு, சிவபெருமான் கையிலிருந்து இறங்கி மயானத்தில் உணவுக் கவளத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்த பிரம்மனின் தலையை மிதித்தார். இதனால் சிவபெருமானுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. 

அம்மன் வீதிஉலா

ஆக்ரோஷமான உருவம் எடுத்ததால் பார்வதிக்கு அங்காளம்மன் என்ற பெயர் உருவானது என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் வகையில் மயானக்கொள்ளை விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்தாண்டும்  மயானக்கொள்ளை விழா நடைபெற உள்ளது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது. தொடர்ந்து  இரவு அம்மன் வீதி உலாவும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

Next Story