இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 March 2021 12:41 AM IST (Updated: 12 March 2021 12:41 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில், 2017-2018-ம் கல்வி ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில், 2017-2018-ம் கல்வி ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு 2017-2018-ம் கல்வி ஆண்டு மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படாமல் உள்ள மடிக்கணினிகளை உடனே வழங்கக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அமுல்காஸ்ட்ரோ, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வன், மாணவி கீர்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோஷமிட்டனர்
ஆர்ப்பாட்டத்தில் 2017-2018 கல்வி ஆண்டில் பிளஸ்-2 மாணவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள மடிக்கணினிகளை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் கோஷங்கள் எழுப்பியபடி சென்ற மாணவர்கள், அங்கு மனு அளித்தனர். 
அந்த மனுவில் கடந்த 2017-2018-ம் ஆண்டு பிளஸ்-2 படித்த மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை. அந்த மாணவர்கள் தற்போது கல்லூரி இறுதி ஆண்டு படித்து வரும் சூழ்நிலையில் கூட இதுவரை மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை. எனவே 2017-2018 கல்வியாண்டு மாணவர்களுக்கு உடனடியாக மடிக்கணினிகள் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 

Next Story