இளையான்குடி,
இளையான்குடியில் தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி பாகமுகவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் முகம்மது தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சுப.மதியரசன், ஆறு.செல்வராசன், வெங்கட்ராமன், தமிழ்மாறன், பேரூர் செயலர் நஜீமுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், தலைமை கழக பிரதிநிதி அன்புநிதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மானாமதுரை தொகுதியில் அறிவிக்கப்படும் தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெறச் செய்வது, மறைந்த வாக்காளர் பெயரை நீக்காமல் அவற்றை தபால் வாக்காளர்களாக வருவதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட நெசவாளர் அணி முருகானந்தம், தலைமை கழக பேச்சாளர் அய்யாச்சாமி, தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி அன்பரசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு நாசர், மாவட்ட தொண்டரணி புலிக்குட்டி, மாவட்ட நெசவாளர் அணி சாரதி என்ற சாருஹாசன், வழக்கறிஞரணி பார்த்தசாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.