நெல்லையில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி 43-வது வார்டு மகிழ்வண்ணநாதபுரம் பகுதியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வினியோகம் செய்யப்படுவதாக கூறி, அப்பகுதி மக்கள் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் கலங்கிய குடிநீரை பாட்டிலில் எடுத்து கொண்டு, நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்து மக்கள் கட்சி நெல்லை மாநகர இளைஞரணி செயலாளர் பாலசுப்பிரமணியன், தென் மண்டல செயலாளர் ராஜபாண்டியன், தென் மண்டல இளைஞரணி தலைவர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள், மாநகராட்சி அலுவலகத்தில் மனு வழங்கி விட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story