கடலூா் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேர்த்திருவிழா
கடலூா் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தேர்த்திருவிழா நடைபெற்றது.
கடலூர்,
கடலூர் மஞ்சக்குப்பத்தில் பழமைவாய்ந்த அங்காளம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் 34-ம் ஆண்டு மயான கொள்ளை விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கரகம் எடுத்தல், சாகை வார்த்தல் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன் இந்திர, அன்ன, நாக வாகனங்களில் வீதிஉலா வந்தது. விழாவையொட்டி நேற்று மாலை தேர்த்திருவிழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) ரண களிப்பு நிகழ்ச்சியும், நாளை (சனிக்கிழமை) மயான கொள்ளை விழா நடக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முத்துப்பல்லக்கு நிகழ்ச்சியும், 15-ந்தேதி மஞ்சள் நீராட்டு, 16-ந்தேதி பால்கஞ்சி வார்த்தலுடன் விழா நிறைபெறுகிறது.
Related Tags :
Next Story