பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்ற பக்தர்கள்


பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்ற பக்தர்கள்
x
தினத்தந்தி 12 March 2021 1:11 AM IST (Updated: 12 March 2021 1:11 AM IST)
t-max-icont-min-icon

பிரான்மலை பாலமுருகன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்றனர்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் 2 ஆயிரத்து 500 அடி உயரத்தில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் சிவராத்திரி அன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து செல்வது வழக்கம். அது போல் இந்த ஆண்டு மலை அடிவாரத்தில் உள்ள கொடுங்குன்றநாதர் குயில அமுத நாயகி அம்மன் கோவிலில் வெளிமண்டபத்தில் முருகபெருமானுக்கு சிறப்பு பூஜை நேற்று நடந்தது. முருகபெருமான் சன்னதி முன்பு பால்குடங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து பால்குடங்களுக்கு குன்றகுடி ஆதீனம் பொன்னம்பலஅடிகளார் தலைமையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு பிரான்மலை பாலமுருகன் கோவிலுக்கு புறப்பட்டனர். இதில் பிரான்மலை ஊராட்சி மன்ற தலைவர் ராமசுப்பிரமணியம், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், சிவபுரி சேகர், கதிர்காமம் மற்றும் பிரான்மலை அ.தி.மு.க. கிளைச் செயலாளர் கருப்பையா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்றனர்.


Next Story