44,702 புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை விரைவு தபாலில் அனுப்பும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்


44,702 புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை  விரைவு தபாலில் அனுப்பும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 12 March 2021 1:21 AM IST (Updated: 12 March 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் 44 ஆயிரத்து 702 புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை விரைவு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது.

தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் 44 ஆயிரத்து 702 புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை விரைவு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது.

புதிய வாக்காளர்கள்

கடந்த 1-1-2021-யை தகுதி நாளாக கொண்டு தயார் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் கடந்த 20-1-2021 அன்று தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட 44 ஆயிரத்து 702 புதிய வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டு வரப்பெற்றுள்ளது.

இந்த புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலமாக வாக்காளர்களின் முகவரிக்கு விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

விரைவு தபால்

தென்காசி கோட்டத்திற்கான புதிய வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், தென்காசி மாவட்ட கலெக்டருமான சமீரன்  தொடங்கி வைத்தார். அதனை வாக்காளர் பதிவு அலுவலரும், தென்காசி உதவி கலெக்டருமான ராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார்.  பின்னர் அவற்றை வாக்காளர்களின் முகவரிக்கு விரைவு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷேக் அப்துல் காதர், தேர்தல் தாசில்தார் சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story