சங்கரன்கோவிலில் அமைச்சர் ராஜலட்சுமிக்கு உற்சாக வரவேற்பு
சங்கரன்கோவிலில் அமைச்சர் ராஜலட்சுமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சட்டசபை தொகுதி (தனி) அ.தி.மு.க. வேட்பாளராக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் அறிவிப்பை தொடர்ந்து சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அமைச்சர் ராஜலட்சுமி திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னா் அவர் சங்கரன்கோவிலுக்கு வந்தார். அங்கு அமைச்சர் ராஜலட்சுமிக்கு தேரடி திடலில் அ.தி.மு.க.வினர் ஒயிலாட்டம், பேண்ட் வாத்தியங்களுடன் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் ராஜலட்சுமி சங்கரநாராயண சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தினார்.
Related Tags :
Next Story