6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது

புதுக்கோட்டை
தமிழகத்தில் அடுத்த மாதம் 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தற்போது அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் கூட்டணி பேச்சு வார்த்தை இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்தநிலையில் வேட்பு மனு தாக்கல் இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அதன்படி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, அறந்தாங்கி, விராலிமலை, திருமயம், ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை (தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது. இதில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், அறந்தாங்கி தொகுதிக்கு அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகத்திலும், விராலிமலை தொகுதிக்கு இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் திருமயம், ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை(தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அந்தந்த தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள தேர்தல் விதிமுறைகளை வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும் பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story