மத்திய பிரதேசம் செல்லும் ராஜபாளையம் நாய்கள்
வெடி பொருட்கள் கண்டுபிடிக்கும் பணிக்காக ராஜபாளையம் நாய்கள் மத்திய பிரதேசத்திற்கு செல்கிறது.
ராஜபாளையம்,
வெடி பொருட்கள் கண்டுபிடிக்கும் பணிக்காக ராஜபாளையம் நாய்கள் மத்திய பிரதேசத்திற்கு செல்கிறது.
பெயர் பெற்ற நாய்கள்
ராஜபாளையத்தை சேர்ந்த ஜாதி நாய்கள், ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, கன்னி போன்ற வகையான நாய்கள் உலக அளவில் பெயர் பெற்றவை.
இவைகள் எஜமானர்களுக்கு விசுவாசமாகவும், நம்பிக்கையாகவும், அதிகமான மோப்ப சக்தி உள்ளதாகவும் விளங்குவதால் இந்த வகை நாய்களை பயன்படுத்துமாறு பிரதமர் மோடி மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
25 பேர் ெகாண்ட குழு
இதன் காரணமாக மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து நுண்ணறிவு போலீஸ் அதிகாரிகள் நாய்கள் வாங்குவதற்காக ராஜபாளையம் வருகை தந்தனர்.
நுண்ணறிவு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.பி. பாண்டே தலைமையில் டாக்டர் யு.கே.சுரசியன், இன்ஸ்பெக்டர் அமர்சிங், துணைத்தலைவர் ஏ.பி. சிங் பட்டேல் உள்பட 25 பேர் கொண்ட குழுவினர் ஒரு வாகனங்களில் ராஜபாளையம் வந்தனர்.
இவர்களுக்கு தேவையான நாய்களை ராஜபாளையம் கூட்டுறவு நாய் வளர்ப்போர் பண்ணையில் சீனிவாச மூர்த்தி காட்டினார்.
ராஜபாளையம், கோம்பை, சிப்பிபாறை மற்றும் கன்னி வகையை சோ்ந்த 14 வகையான நாய்களை தேர்வு செய்து வாங்கி போபாலுக்கு கொண்டு சென்றனர்.
மோப்பசக்தி
இந்த வகையான நாய்கள் வெடி பொருட்களை மோப்ப சக்தியால் கண்டறியவும், போதைப்பொருட்களை கண்டறியவும், மற்றும் கொலை, கொள்ளை போன்றவைகளை கண்டறியவும் பயிற்சி அளித்து பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story