கோவில்களில் சிறப்பு பூஜை


கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 12 March 2021 1:55 AM IST (Updated: 12 March 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் சிறப்பு பூஜை

கீரமங்கலம்
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் பழமையான ஒப்பிலாமணியம்பிகை உடனுறை மெய்நின்றநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தடாகத்தில் 81 அடி உயரத்தில் பிரமாண்டமான சிவன் சிலையும், எதிரில் புலவர் நக்கீரருக்கு  சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று சிவராத்திரியையொட்டி இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து விடிய, விடிய நடைபெற்ற பூஜையில் பங்கேற்றனர். இதேபோல, அரிமளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்குடி கைலாசநாதர் சமேத பிரசன்ன நாயகி கோவிலில் சிவராத்திரி விழா நடைபெற்றது. முன்னதாக அதிகாலை கைலாசநாதருக்கு 11 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இரவு நான்கு கால பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நெடுங்குடி கைலாசபுரத்தில் அருள்பாலித்து வரும் முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு 11 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு பட்டு மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.


Next Story