முதியவரை அரிவாளால் வெட்டியவர் கைது


முதியவரை அரிவாளால் வெட்டியவர் கைது
x
தினத்தந்தி 12 March 2021 2:03 AM IST (Updated: 12 March 2021 2:03 AM IST)
t-max-icont-min-icon

முதியவரை அரிவாளால் வெட்டியவர் கைது

மேலூர்
மேலூர் அருகே கீழவளவு போலீஸ் சரகத்தில் உள்ள அட்டப்பட்டியை சேர்ந்தவர் ராஜாமணி(வயது 70). இவரது கடையில் அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக்(21) என்பவர் மது குடிக்க காகித கப் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் கடைகாரர் ராஜமணி தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் அரிவாளால் ராஜமணியை வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த ராஜாமணி மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் ்சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கீழவளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகராஜா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

Next Story