முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்


முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 12 March 2021 2:13 AM IST (Updated: 12 March 2021 2:13 AM IST)
t-max-icont-min-icon

முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலாக்குறிச்சியில் சுகாதாரத்துறை சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன் தலைமையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைக்காக திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கடைகள் உள்ளிட்ட இடங்களில் முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.200 வீதம் மொத்தம் 4 பேருக்கு ரூ.800 அபராதமாக விதிக்கப்பட்டது. ஆய்வின்போது சுகாதாரத்துறையினர் பலர் உடனிருந்தனர்.

Next Story