சிவகங்கை,
சிவகங்கை அரசு மருத்துவமனை எம்.ஆர்.ஐ., ஸ்கேன் சென்டர் 4-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு டீன் ரத்தினவேல் தலைமை தாங்கி பேசும் போது:- இந்த கல்லூரியில் ரேடியோ டைக்னாஸ்டிக் துறையை இன்னும் வளர்ச்சி பெற செய்ய வேண்டும். அப்போது தான், முதுகலை ரேடியாலஜிஸ்ட் படிப்பை தொடங்க முடியும். இங்குள்ள எம்.ஆர்.ஐ., ஸ்கேன் சென்டர் மூலம் ஏராளமான ஏழை குடும்பத்தினர் முதல்வர் காப்பீடு திட்டம் மூலம் இலவசமாகவும், குறைந்த கட்டணத்தில் பயன் பெறுகின்றனர். அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் ஏழைகளுக்கு உதவும் வகையில் அனைவரும் பணியாற்ற வேண்டும், என்றார்.விழாவில் நிலைய மருத்துவ அலுவலர் மீனா, கண்காணிப்பாளர் குணா, கிருஷ்ணா டயாலிஜிஸ்டிக் தென்பிராந்திய தலைவர் அனிஷ்ஷா, உதவி நிலைய மருத்துவ மிதுன், வித்யாஸ்ரீ, சூரியநாராயணன், தலைமை ரேடியோ டெக்னீசியன் வேணுகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.