புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்


புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்
x
தினத்தந்தி 12 March 2021 2:26 AM IST (Updated: 12 March 2021 2:26 AM IST)
t-max-icont-min-icon

புதிய வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று கலெக்டர் கூறினார்.

சிவகங்கை,

புதிய வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று கலெக்டர் கூறினார்.
புதிய வாக்காளர்கள்
சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலர் மதுசூதன் ரெட்டி, விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தேர்தல் ஆணைய அறிவுரைப்படி, வாக்காளர் சிறப்பு முறைத்திருத்தம் - மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 10 ஆயிரத்து 447 வாக்காளர்களும், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 9 ஆயிரத்து 871 வாக்காளர்களும், சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் 9 ஆயிரத்து 88 வாக்காளர்களும், மானாமதுரை (தனி) சட்டமன்ற தொகுதியில் 9 ஆயிரத்து 685 வாக்காளர்களும் சேர்த்து மொத்தம் 39 ஆயிரத்து 091 புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
அடையாள அட்டை
 இவர்களுக்கு முதன்முறையாக இந்திய தேர்தல் ஆணையத்தால் இந்திய தபால்துறையின் மூலம் நேரடியாக விரைவு அஞ்சல் மூலம் வாக்காளரின் முகவரிக்கு நேற்று முதல் புகைப்பட அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படுகிறது.இதுதொடர்பான மேலும் விவரங்களை 1950 எண்ணும் கட்டணமில்லா தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story