எமதர்மன் கோவிலில் மாசி திருவிழா
பழைய ஏழாயிரம் பண்ணையில் உள்ள எமதர்மன் கோவிலில் மாசி திருவிழா நடைபெற்றது.
தாயில்பட்டி,
பழைய ஏழாயிரம் பண்ணையில் உள்ள எமதர்மன் கோவிலில் மாசி திருவிழா நடைபெற்றது.
பத்ரகாளி அம்மன்
வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம் பண்ணையில் சீர்காட்சி பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு மகா கணபதி ஹோமம், மகா அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. குத்து விளக்கு பூஜைைய தொழிலதிபர் சீக்கிய குரூப்ஸ் உரிமையாளர் காளியப்பன் தொடங்கி வைத்தார். விழாவையொட்டி அம்மன் நகர்வலம், பொங்கலிடுதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
எமதர்மன் கோவில்
பழைய ஏழாயிரம்பண்ணையில் எமதர்மனுக்கு கட்டப்பட்ட கோவிலில் மாசி திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
நேற்று முதல் நாளில் எமதர்மனுக்கு இளநீர், பால், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதேபோல ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள சிப்பிபாறை கிராமத்தில் ராமபுலிஅய்யனார் கோவிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது.
சாமி தரிசனம்
வீர நாகம்மாள்கோவில், வல்லம்பட்டியில் வீரசின்னம்மாள் கோவில், பேரம்மாள் திருக்கோவில், தாயில்பட்டியில் கழுவுடையம்மன் கோவில், தாயில்பட்டி பச்சையாபுரத்தில் கன்னி மாரியம்மன் கோவில் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் மாசி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story