2 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு


2 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
x
தினத்தந்தி 12 March 2021 2:56 AM IST (Updated: 12 March 2021 2:56 AM IST)
t-max-icont-min-icon

2 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

கீரனூர்
கீரனூரில் உள்ள ஜவுளிக் கடைகள், மளிகை கடைகள், நகைக் கடைகள், வணிக வளாகம் உள்ளிட்ட கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனரா என மாவட்ட குழந்தை தொழிலாளர் பாதுகாப்பு ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் 1098 குழந்தைகள் நல அலுவலர் கிருஷ்ணவேணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நித்யா ஆகியோர் கடை, கடையாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.  ஒரு சில கடைகளில் பணிக்கு அமர்த்தப்பட்டு இருந்த சிறுவர், சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள், கொரோனா காரணமாக பள்ளிக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் தற்காலிகமாக வேலைக்கு வந்ததாக கூறினர். பின்னர் 13 வயதுக்கு கீழ் வேலை பார்த்த 2 சிறுவர்கள் மீட்கப்பட்டு அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புதுக்கோட்டை நல வாரிய அலுவலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறும் கவுன்சிலுக்கு அழைத்து வருமாறு கூறினர். குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்திய கடையின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Next Story