திருச்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை பொதுமக்கள், வியாபாரிகள் முற்றுகை
அரிசி, பருப்பு மூட்டைகள் மழைநீர் புகுந்து நாசமானதாக அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை பொதுமக்கள், வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.
திருச்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை
பொதுமக்கள், வியாபாரிகள் முற்றுகை
மழைநீர் புகுந்து அரிசி, பருப்பு மூட்டைகள் நாசமானதாக புகார்
திருச்சி,
அரிசி, பருப்பு மூட்டைகள் மழைநீர் புகுந்து நாசமானதாக அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை பொதுமக்கள், வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.
வீடு, கடைகளுக்குள் புகுந்த மழைநீர்
திருச்சி மாநகரில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் ஆங்காங்கே பள்ளமான இடங்களில் மழைநீர் குட்டையாக தேங்கி நின்றது.
மேலும் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் உள்ள ‘ஓ' பாலத்தில் மழைநீர் தேங்கி நின்று அருகில் இருந்த வீடு மற்றும் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
கோட்ட அலுவலகம் முற்றுகை
இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை 11 மணிக்கு அப்பகுதி மளிகைக்கடை வியாபாரிகள் நனைந்த அரிசி மூட்டை, பருப்பு மற்றும் மாவு மூட்டைகளை ஒரு தள்ளுவண்டியில் ஏற்றி, அவற்றுக்கு மாலை அணிவித்து அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களுடன் அரசியல் கட்சியினர் சிலரும் வந்திருந்தனர். அவர்களிடம் காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால், அவர்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி கோட்ட அதிகாரியிடம் முறையிடுகிறோம் என்றனர்.
பேச்சுவார்த்தை
அதன் பின்னர், இளநிலை பொறியாளர் மகாலிங்கத்தை சந்தித்து, தங்கள் குறைகளை தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் தரப்பில், உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதைதத்தொடா்ந்து அவர்கள் கலைந்து ெசன்றனர்.
இதற்கிடையே கோட்ட அலுவலக வளாகத்தில் நின்ற சலீம் என்பவர், மழையால் கஷ்டப்பட்டு அல்லல்பட்டது நாங்கள். ஆனால், தற்போது அரசியல் செய்வதற்காக கட்சியினர் இங்கு வந்திருப்பது ஏன்? என்றார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் சலசலப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story