திருச்செங்கோட்டில் எல்லை பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு
திருச்செங்கோட்டில் எல்லை பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
எலச்சிப்பாளையம்,
சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், தேர்தலை அமைதியான முறையில் நடத்தவும் தமிழகம் முழுவதும் போலீசார், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இந்தியா-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. இதனை திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் சட்டையம்புதூர், சூரியம்பாளையம் உள்பட முக்கிய பகுதிகள் வழியாக சென்றது.
Related Tags :
Next Story