ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடியே 8 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு,
தமிழகத்தில் அடுத்த மாதம் 6-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள இந்த நிலையில் செங்கல்பட்டு அருகே திருப்போரூர் கூட்டுசாலையில் தேர்தல் பறக்கும்படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது செங்கல்பட்டு நகரத்தில் உள்ள ஏ.டி.எம்.மில் பணம் நிரப்ப வந்த 2 வாகனங்களை மறித்து சோதனையில் ஈடுபட்டனர் அந்த வாகனத்தில் கொண்டு வந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து பணம் இருந்த 2 வாகனங்களையும் செங்கல்பட்டு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்து அதில் இருந்த ரூ.1 கோடியே 8 லட்சத்தை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் செங்கல்பட்டில் ரூ.1 கோடியே 8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story