நீலகிரி மாவட்டத்தில் ஓட்டல் உள்பட 2 கடைகளுக்கு சீல்
நீலகிரி மாவட்டத்தில் ஓட்டல் உள்பட 2 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
பந்தலூர்,
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று பந்தலூர் பஜாரில் தாசில்தார் தினேஷ், வருவாய் ஆய்வாளர்கள் கிரிஜா, முரளி, கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது ஓட்டல் மற்றும் ஜவுளிக்கடையில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காதது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story