பந்தலூரில் ஆதிவாசி பெண் மர்மச்சாவு - போலீசார் விசாரணை


பந்தலூரில் ஆதிவாசி பெண் மர்மச்சாவு - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 March 2021 7:33 PM IST (Updated: 12 March 2021 7:43 PM IST)
t-max-icont-min-icon

பந்தலூரில் ஆதிவாசி பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட எருமாடு அருகே உள்ள கொல்லம்வயல் ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் தம்பி. இவரது மனைவி ராதா (வயது 40). இந்த நிலையில் நேற்று காலையில் தம்பி, வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார். 

வீட்டில் ராதா மட்டும் தனியாக இருந்தார். மதிய நேரத்தில் அவரது வீட்டுக்கு உறவினர்கள் வந்தனர். அப்போது வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து எருமாடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு தேவாலா துணை சூப்பிரண்டு அமீர் அகமது தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர்.

அப்போது ராதா இறந்து கிடப்பதும், அவரது உடலில் பலத்த காயங்கள் இருப்பதும் தெரியவந்தது. பின்னர் உடலை மீட்டு பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் அவரது கணவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story