வனத்துறை நிலத்தில் சாலை அமைப்பு - வனத்துறையினர் எச்சரிக்கை


வனத்துறை நிலத்தில் சாலை அமைப்பு - வனத்துறையினர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 12 March 2021 7:47 PM IST (Updated: 12 March 2021 7:58 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் வனத்துறை நிலத்தில் அமைக்கப்பட்ட சாலையை அகற்ற வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள மாக்கமூலா பகுதியில் வனத்துறை நிலத்தில் புதிதாக சாலை அமைக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது. இதையொட்டி கூடலூர் வன அலுவலர் ஓம்காரம் உத்தரவின்பேரில் அங்கு வனச்சரகர் ராமகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் நேற்று மாலை ஆய்வு நடத்தினர். 

அப்போது வனத்துறை நிலத்தில் குறிப்பிட்ட தூரத்துக்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபரிடம், வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அடுத்த ஒரு வாரத்துக்குள் சாலையை அகற்ற வேண்டும், இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

இதுகுறித்து வனச்சரகர் ராமகிருஷ்ணன் கூறும்போது, 

வனத்துறை நிலத்தின் கரையோரத்தில் பட்டா நிலத்துக்கு பாதை செல்கிறது. இதை பயன்படுத்தி வனத்துறை நிலத்தில் சுமார் 200 மீட்டர் நீளத்துக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. 

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Next Story