தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு


தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 12 March 2021 8:21 PM IST (Updated: 12 March 2021 8:40 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக மையத்தின் செயல்பாடுகளை தேர்தல் செலவின பார்வையாளர் விசால் எம்.சனப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் செலவுகளை கண்காணிக்க குன்னூர், கூடலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளர் அமர்சிங் நெகரா, ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு விசால் எம்.சனப் ஆகிய 2 பேரை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்து உள்ளது. 

அவர்கள் 2 பேரும் நீலகிரிக்கு வந்தனர். இந்த நிலையில் நேற்று நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக மையத்தின் செயல்பாடுகளை தேர்தல் செலவின பார்வையாளர் விசால் எம்.சனப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு வாகன சோதனையில் ஈடுபடும் பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுவினரை ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணிப்பது, தினசரி நாளிதழ்கள், தொலைகாட்சிகளை கண்காணித்து பதிவு செய்யும் பதிவேடுகள், தேர்தல் தொடர்பாக பெறப்படும் புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உடனிருந்தார்.

Next Story