பரமக்குடி பகுதியில் சிவராத்திரி விழா
பரமக்குடி பகுதியில் சிவராத்திரி விழா நடைபெற்றது
பரமக்குடி,
பரமக்குடி பகுதியில் மகாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. கோவில்குடிமக்கள் விடிய, விடிய தங்களது குலதெய்வங்களை வழிபட்டு சிறப்பு பூஜை நடத்தினர். பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து தங்கள் குலதெய்வங்களை வழிபட்டு சென்றனர். பரமக்குடி அருகே உள்ள பாம்பூர் கிராமத்தில் முத்து இருளாயி அம்மன் கோவிலில் மகாசிவராத்திரி விழா நடந்தது. பரமக்குடி சுந்தர் நகரில் உள்ள ஜோதிடர் ஓம் ஸ்ரீ கண்ணாஜி ஆலயத்தில் சிவராத்திரி விழா விடிய விடிய கொண்டாடப் பட்டது. அதையொட்டி அம்மனுக்கு பூ அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு படையலிட்டு பழங்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மக்கள் நோயின்றி நலமுடன் வாழ சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story