வாக்காளர் விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு


வாக்காளர் விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு
x
தினத்தந்தி 12 March 2021 9:36 PM IST (Updated: 12 March 2021 9:36 PM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது

முதுகுளத்தூர், 
முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய அரசு இளைஞர் நல விளையாட்டு அமைச்சகம், நேரு யுவகேந்திரா, ராமநாதபுரம் மற்றும் சுவாமி விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம்  இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு, இளையோர் பாராளுமன்ற நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் மீனாட்சி தலைமையில் இளையோர் அலுவலர் நோமன் அக்ரம் முன்னிலையில் நடைபெற்றது.  ஒன்றிய பொறுப்பாளர் விக்னேஸ்வரன் வரவேற்றார். முன்னாள் ராணுவ வீரர் பராசூரன், வட்டார திட்ட உதவியாளர் வெள்ளை பாண்டியன், ஆசிரியர் துரைப்பாண்டியன், மற்றும் கமுதி பேரூராட்சி வரித்தண்டலர் மங்களநாத சேதுபதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. கல்லூரி பேராசிரியர்கள் சந்திரசேகர், பாலமுருகன், நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் நிர்மல் குமார் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். குமரேசன் நன்றி கூறினார்.

Next Story