கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 28 நாட்களுக்கு ரத்ததானம் செய்யக்கூடாது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்


கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 28 நாட்களுக்கு ரத்ததானம் செய்யக்கூடாது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 12 March 2021 9:58 PM IST (Updated: 12 March 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 28 நாட்களுக்கு ரத்ததானம் செய்யக்கூடாது என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

திருப்பூர்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 28 நாட்களுக்கு ரத்ததானம் செய்யக்கூடாது என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள்...
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதன் பின்னர் வருவாய்த்துறை, போலீசார் ஆகியோருக்கு போடப்பட்டது.
இதற்கு அடுத்தபடியாக தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயது முதல் 60 வயது வரை நீரிழிவு நோய் உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 9 அரசு மருத்துவமனைகள் மற்றும் 23 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 
ரத்ததானம் செய்யக்கூடாது
இந்த நிலையில் தற்போது தன்னார்வலர்கள் பலர் ரத்ததானம் செய்வது வழக்கம். தனியார் அமைப்புகள் மூலமாக மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் தினமும் ரத்ததானம் செய்து வருகிறார்கள். இதன் மூலம் விபத்துகளில் சிக்கியவர்கள் முதல் பலரும் பயன்பெற்று வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் 28 நாட்கள் வரை ரத்ததானம் செய்யக்கூடாது என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என கொரோனா தடுப்பூசியான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு செலுத்தியவர்கள் 28 நாட்கள் வரை ரத்ததானம் செய்யக்கூடாது. அதாவது கொரோனா தடுப்பூசி போடப்படும் 2 தவணைக்கு உட்பட்ட காலத்திலும், 2-ம் கட்ட தடுப்பூசி செலுத்தியதில் இருந்தும் 28 நாட்கள் வரை ரத்ததானம் செய்யக்கூடாது. இந்த காலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் ரத்தம் மற்றவர்களுக்கு செலுத்தப்படும் போது, அவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் ரத்தானம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. எனவே கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
------------

Next Story