பஸ்சில் கொண்டு வந்த சேலைகள் பறிமுதல்
கோவையில் இருந்து நாகைக்கு பஸ்சில் கொண்டு வந்த சேலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் உரிய ஆவணங்களை கொடுத்ததால் திரும்ப ஒப்படைத்தனர்.
நாகப்பட்டினம்:
கோவையில் இருந்து நாகைக்கு பஸ்சில் கொண்டு வந்த சேலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் உரிய ஆவணங்களை கொடுத்ததால் திரும்ப ஒப்படைத்தனர்.
வாகன சோதனை
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று முதல் தொடங்கியது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதை தொடர்ந்து வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய பரிசு பொருட்கள் மற்றும் பணம் கொண்டு செல்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை பறக்கும்படை தாசில்தார் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் நாகை- நாகூர் மெயின்ரோடு அரசு ஐ.டி.ஐ. அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சேலைகள் பறிமுதல்
அப்போது கோவையில் இருந்து நாகையை நோக்கி வந்த தனியார் பஸ்சை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அந்த பஸ்சிஸ் 7 மூட்டைகளில் சேலைகள் இருப்பது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்ததால் அந்த சேலை மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த சேலை மூட்டைகளை நாகை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
நாகூரை சேர்ந்த மொய்தீன் என்பவர் இந்த சேலைகளை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து நாகை தாசில்தார் முருகு விசாரணை நடத்தினார். இதையடுத்து சேலைகளுக்கு ஆவணங்களை எடுத்து வந்து அதிகாரிகளிடம் கொடுத்தார். இதனால் அந்த சேலைகளை மீண்டும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story