விக்கிரவாண்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
விக்கிரவாண்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த மதுரப்பாக்கம் கிராம மக்களுக்கு அங்குள்ள மினி குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இதற்கு நீரேற்ற பயன்படும் மின்மோட்டார் பழுதடைந்து விட்டது. இதனால் கிராமத்தில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த பகுதி மக்கள் மின்மோட்டாரை சரி செய்து குடிநீர் வினியோகம் செய்ய கோரி அந்த பகுதியில் திருக்கனூர் சாலையில் காலி குடத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பரணி நாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் சாமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதில், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அனைவரும் மறியலை கைவிட்டனர்.
Related Tags :
Next Story