பென்னாகரத்தில் 2-வது நாளாக அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
பென்னாகரத்தில் 2-வது நாளாக அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பென்னாகரம்,
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. பென்னாகரம் தொகுதி பா.ம.க. வேட்பாளராக மாநில தலைவர் ஜி.கே.மணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அ.தி.மு.க.விற்கு பென்னாகரம் தொகுதி ஒதுக்கப்படாததை கண்டித்து அ.தி.மு.க.வினர் நேற்று முன்தினம் பென்னாகரத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக பென்னாகரத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பென்னாகரம் தொகுதியை அ.தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story