மின்மாற்றியில் திடீர் தீவிபத்து


மின்மாற்றியில் திடீர் தீவிபத்து
x
தினத்தந்தி 13 March 2021 12:22 AM IST (Updated: 13 March 2021 12:22 AM IST)
t-max-icont-min-icon

மின்மாற்றியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

நொய்யல்
புகளூர் காகித ஆலையின் எதிர்புறம் துணை மின் நிலையம் உள்ளது. அந்த துணை மின் நிலையத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் உயர் அழுத்த மின் கம்பி மூலம் மின்சாரம் அங்கு வருகிறது. அந்த உயர் அழுத்த மின்சாரம் காகித ஆலைக்கு உற்பத்திக்காக தேவைக்கேற்ப அனுப்பப்படுகிறது. காகித ஆலைக்கு  தேவைப்படும் மின்சாரம் போக மீதியுள்ள மின்சாரத்தை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும், மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கும் இங்கிருந்து பிரித்து தனிதனியாக உயர் அழுத்த மின் கம்பி மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்ட பகுதிக்கு புகளூர் காகித ஆலை துணை மின் நிலையத்தில் இருந்து அனுப்பப்படும் 110 மெகாவாட் மின்மாற்றியில் உள்ள ஒரு செல் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்திற்கு செல்லும் மின்சாரம் திடீரென தடைபட்டது. இதுகுறித்து உடனடியாக மின்வாரிய உதவி கோட்ட பொறியாளர் பிரபாகரன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, மின்மாற்றியில் எரிந்து கொண்டிருந்த தீயை ரசாயன கலவை மூலம் அணைத்து கட்டுப்படுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Next Story