கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் நாள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் நாள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை
x
தினத்தந்தி 13 March 2021 12:33 AM IST (Updated: 13 March 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளில் நேற்று முதல் நாள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி உட்பட 6 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. 

அதன்படி, ஊத்தங்கரை, பர்கூர், தொகுதிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அங்குள்ள தாலுகா அலுவலகங்களிலும், கிருஷ்ணகிரி தொகுதிக்கு, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலகத்திலும், வேப்பனப்பள்ளி தொகுதிக்கு சூளகிரி தாலுகா அலுவலகத்திலும், ஓசூர் தொகுதிக்கு, ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்திலும், தளி தொகுதிக்கு, தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யலாம்.

மனு தாக்கல் செய்யவில்லை

நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியதை தொடர்ந்து, தாலுகா, உதவி கலெக்டர் அலுவலகங்கள் முன்பு போலீசார், மத்திய துணை ராணுவ படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வேட்பு மனு தாக்கல் முதல் நாளான நேற்று, 6 தொகுதிகளில் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் வேட்புமனுக்களை சிலர் பெற்று சென்றனர்.

Next Story