காரைக்குடி,
காரைக்குடி வட்ட ஓய்வூதியர்கள் சங்க ஆண்டு விழா மற்றும் பொதுக்குழுக்கூட்டம் சுப்பிரமணியபுரத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு அதன் தலைவர் அங்கமுத்து தலைமை தாங்கினார். செயலாளர் மோகன்தாஸ் ஆண்டறிக்கை வாசித்தார்.பின்னர் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறந்த ஓய்வூதியர் குடும்பங்களுக்கு குடும்பநல நிதி ரூ.50,ஆயிரம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.அதனை விரைவில் வழங்க வேண்டும். 3 தவணைகளில் வழங்க வேண்டிய அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். ஊதிய குழுவில் 21 மாதங்களுக்கான நிலுவைத் தொகையினை வழங்க வேண்டும்.மூத்த ஓய்வூதியர்களுக்கு ரெயில்வே மற்றும் பஸ் போக்குவரத்து கட்டணங்களில் 30 சதவீதம் சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் மற்றும் தமிழ்நாடு அரசு விருது பெற்ற ஹென்றி பாஸ்கர் சிறப்புரையாற்றினார். அப்பல்லோ டாக்டர் திருப்பதி கொரோனா ஊசி போட்டுக் கொள்ள வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார். முடிவில் நிர்வாக சபை உறுப்பினர் மைக்கேல் நன்றி கூறனார்.