திருப்பத்தூரில் தி.மு.க. அலுவலகத்துக்குள் புகுந்து கண்ணாடியை உடைத்து ரகளை. 10 பேர்மீது வழக்குப்பதிவு


திருப்பத்தூரில்  தி.மு.க. அலுவலகத்துக்குள் புகுந்து கண்ணாடியை உடைத்து ரகளை. 10 பேர்மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 13 March 2021 12:53 AM IST (Updated: 13 March 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் தி.மு.க. அலுவலகத்துக்குள் புகுந்து கண்ணாடியை உடைத்து ரகளை

திருப்பத்தூர்

திருப்பத்தூர் தொகுதி ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ.வின் தி.மு.க. ஒன்றிய அலுவலகம் ெரயில்வே ஸ்டேஷன் ரோடு அருகே உள்ளது. நேற்று மாலை திருப்பத்தூர் நகர தி.மு.க.வைச் சேர்ந்த லாங்கிலிபேட்டை தாமோதரன் மகன் மதன் மற்றும் அடையாளம் தெரியாத 10 பேர், தி.மு.க. ஒன்றிய அலுவலகத்துக்கு வந்துள்ளனர். 

அப்போது அலுவலகத்தில் இருந்த பார்த்திபன் என்பவரை கத்தியை காட்டி மிரட்டியதாகவும், அங்கு பணிபுரிந்த பெண்ணை, கம்பு, மற்றும் கையால் தாக்கி, நாற்காலிகளை தூக்கிப் போட்டு, கதவை சேதப்படுத்தி, கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது. 
இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story