மாட்டு வண்டி பந்தயம்


மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 13 March 2021 1:13 AM IST (Updated: 13 March 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

கல்லல் பகுதியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது

கல்லல்,

காரைக்குடி அருகே கல்லல் ஒன்றியம் ஆலத்துப்பட்டியில் மாசி மகாசிவராத்திரியை யொட்டி மாட்டு வண்டி பந்தயம் ஆலத்துப்பட்டி-குன்றக்குடி வழியாக நேமம் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 51 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 16 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கே.புதுப்பட்டி அம்பாள் வண்டியும், 2-வது பரிசை கல்லல் உடையப்பா சக்தி மற்றும் வெளிமுத்தி வாகினி வண்டியும், 3-வது பரிசை புலிமலைப்பட்டி முனிச்சாமி வண்டியும், 4-வது பரிசை வல்லாளப்பட்டி இளந்தேவன் வண்டியும் பெற்றன.
பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 35 வண்டிகள் கலந்துகொண்டு இரு பிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை விராமதி தையல் நாயகி கருப்பையா வண்டியும், 2-வது பரிசை துழையானூர் பாஸ்கரன் வண்டியும், 3-வது பரிசை காயக்காடு குமார் மற்றும் பீர்க்கலைக்காடு பைசல் வண்டியும், 4-வது பரிசை ஓடித்திக்காடு கைலாசநாதர் வண்டியும் பெற்றன. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை வடகுடி நெல்லியாண்டவர் வண்டியும், 2-வது பரிசை வெள்ளரிப்பட்டி சமர்சித் வண்டியும், 3-வது பரிசை நெம்மலிக்காடு ஓம்முடைய அய்யனார் வண்டியும், 4-வது பரிசை மணப்பட்டி அசோதையம்மன் வண்டியும், 5-வது பரிசை பில்லமங்கலம் வாசுதேவன் வண்டியும் பெற்றன.. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story