அறந்தாங்கி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை மாற்றக்கோரி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


அறந்தாங்கி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை மாற்றக்கோரி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 March 2021 1:27 AM IST (Updated: 13 March 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை மாற்றக்கோரி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மணமேல்குடி
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜநாயகத்தை மாற்றக்கோரி அக்கட்சியினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அ.தி.மு.க. நிர்வாகி மூர்த்தி தலைமையில் மணமேல்குடியில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது தட்டான்வயலை சேர்ந்த பழனிவேல் என்ற தொண்டர் மண்எண்ணயை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். மேலும், ராஜா என்ற தொண்டர் வேட்பாளரை மாற்றக்கோரி மொட்டை அடித்தார். இதேபோல, அ.தி.மு.க. வேட்பாளரை மாற்றக்கோரி அறந்தாங்கியில் பல்வேறு இடங்களில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அதில், ராஜநாயகத்தை வேட்பாளராக அறிவித்ததை எந்த தொண்டனும், தொகுதி மக்களும் விரும்பவில்லை. அவரை உடனடியாக மாற்றிவிட்டு வேறு வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்றும், மேலும் சில வாசகங்களும் இடம் பெற்று இருந்தன.

Next Story