பாய்மர படகுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
பாய்மர படகுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
கோட்டைப்பட்டினம்
புதுக்கோட்டை மாவட்டம், வடக்கு புதுக்குடி கிராமத்தில் சிவராத்திரியை முன்னிட்டு பாய்மர படகுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் இருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட பாய்மர படகுகள் கலந்து கொண்டன.
இந்த போட்டியில் முதல் பரிசான ரூ.40 ஆயிரத்தை ராமநாதபுரம் மாவட்டம் பாசிபட்டினத்தை சேர்ந்தவர்களும், இரண்டாம் பரிசு ரூ.30 ஆயிரத்தை ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியை சேர்ந்தவர்களும், மூன்றாம் பரிசு ரூ.25 ஆயிரத்தை மோர்பண்ணை பகுதியை சேர்ந்த படகு வீரர்களும், நான்காம் பரிசு ரூ.20 ஆயிரத்தை தொண்டியை சேர்ந்த அணியினரும் பெற்றனர். வெற்றி பெற்ற படகு உரிமையாளர்களுக்கு சுழல் கோப்பையும், ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை வடக்கு புதுக்குடி கிராம இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story