இருவழி ெரயில் பாதை அமைக்கப்பட்ட இடத்தில் விபத்து ஏற்படும் நிலை


இருவழி ெரயில் பாதை அமைக்கப்பட்ட இடத்தில் விபத்து ஏற்படும் நிலை
x
தினத்தந்தி 13 March 2021 1:51 AM IST (Updated: 13 March 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

ெரயில் பாதை

விருதுநகர், 
விருதுநகர் ெரயில்வே லெவல் கிராசிங்கில் இருவழி ெரயில் பாதை அமைக்கப்பட்ட இடத்தில் தண்டவாளத்தின் பக்கவாட்டு தளம் முறையாக அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளதால் ெரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இருவழி ெரயில் பாதை 
மதுரையில் இருந்து தென் மாவட்டங்களுக்கான ெரயில் பாதை அமைக்கும் திட்ட பணி நடைபெற்று வருகிறது. இதில் சில பகுதிகளில் ெரயில் தண்டவாளம் பதிக்கும் பணி நடைபெற்று முடிந்துள்ளது. தண்டவாளம் பதிக்கும் பணி முடிவடைந்துள்ளது. வாடியான்தெரு லெவல் கிராசிங்சில் ெரயில் பாதை அமைக்கப்பட்ட இடத்தில் தண்டவாளம் பதிக்கப்பட்டுள்ளதற்கு பக்கவாட்டு தளம் முறையாக அமைக்கப்படாததால் அதனை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அதில் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.
 பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும், பெண்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மீது பின்னால் வரும் வாகனங்கள் மோதுவதால் உயிர்பலி ஏற்படும் அபாயமும் உள்ளது.
தொடர்விபத்து 
எனவே ெரயில்வே நிர்வாகம் பொறியியல் துறை மூலம் இந்த இடத்தை ஆய்வு செய்து தண்டவாளம் பாதிக்கப்பட்ட பகுதியில் பக்கவாட்டில் அமைக்கப்பட்ட தளத்தை முறையாக சீர்படுத்த உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இல்லையேல் இப்பகுதியில் தொடர் விபத்துகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும்.

Next Story