3 ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் வாலிபர்
3 ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் வாலிபர்
விருதுநகர்,
சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர் சதீஷ்குமார் (வயது 21). இவர் சென்னை கொரட்டூர் ரோட்டரி சங்க உறுப்பினராக உள்ளார். போலியோ நோய் ஒழிப்பு நடவடிக்கைகளில ஆர்வமுள்ள இவர் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு போலியோ ஒழிப்பினை வலியுறுத்தும் வகையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். மொத்தம் 3,232 கிலோ மீட்டர் சைக்கிளில் செல்லும் இவர் ஆங்காங்கே கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடையே போலியோ நோய் ஒழிப்பு அவசியம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். நேற்று விருது நகர் வந்த இவருக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நோபிள்பள்ளி வளாகத்தில் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவிகளிடையே போலியோ நோய் ஒழிப்பு பற்றி பேசினார். இதில் ரோட்டரி சங்க தலைவர் வடிவேல், ரோட்டரி கவர்னர் (தேர்வு) இதயம் முத்து, பள்ளி நிர்வாகி டாக்டர் ஜெரால்டு ஞானரத்தினம், பள்ளி முதல்வர் வெர்ஜின்இனிகோ, ரோட்டரி சங்க நிர்வாகிகள் விஜயகுமாரி, காயத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story