பிறந்த நாள் கொண்டாட்டத்தில் திடீர் மோதல்; 3 பேர் கைது


பிறந்த நாள் கொண்டாட்டத்தில் திடீர் மோதல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 March 2021 1:55 AM IST (Updated: 13 March 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட திடீர் மோதல் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை:

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டானில் ஒரு வாலிபர் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி கேக் வெட்டிய போது நண்பர்களான முத்துக்குமார் (வயது 20), இசக்கிமுத்து (20) உள்பட சிலர் கேக்கை எடுத்து அருகில் நின்றிருந்த நாகராஜன் (21) முகத்தில் பூசி உள்ளனர். 

இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் திடீரென்று மோதலாக மாறியது. அப்போது நாகராஜனை சரமாரியாக அடித்து, கல்லால் தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். 

இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமார், மணிகண்டன், இசக்கிமுத்து ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story