போலீஸ் என கூறி வியாபாரியை மிரட்டி நகைகள் பறிப்பு


போலீஸ் என கூறி வியாபாரியை மிரட்டி நகைகள் பறிப்பு
x
தினத்தந்தி 13 March 2021 1:55 AM IST (Updated: 13 March 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் என கூறி வியாபாரியை மிரட்டி நகைகள் பறிப்பு

திருமங்கலம்
திருமங்கலம் ஆண்டவர் தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன் (வயது 32). இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தார். அப்போது 4 பேர் அங்கு வந்து போலீசார் என கூறி அவர் அணிந்திருந்த  4 பவுன் நகை மற்றும் ரூ.14 ஆயிரம், 2 செல்போன்களை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் காமாட்சிபுரத்தை சேர்ந்த முத்துப்பாண்டி(34), பனையூரை சேர்ந்த அருண்குமார்(23), காரியாபட்டியை சேர்ந்த மலர் (34), காமாட்சிபுரத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி(25) என தெரியவந்தது. இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story